×

சிவலிங்கத்தை மட்டும் விட்டுவிட்டு ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

The post சிவலிங்கத்தை மட்டும் விட்டுவிட்டு ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gnanavabi Masjid ,Shiv Lingam ,Varanasi ,Uttar Pradesh ,Shiva ,lingam ,
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...